சென்னை,

சூப்பர் டூப்பர் டிவிக்கு உபாகரணங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்ததாக  சுதாகரன் மற்றும் பாஸ்கரன் மீது தொடரப்பட்டு வழக்கு விசாரணையை எழும்பூர் பொருளாதார  நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

ஜெயா தொலைக்காட்சியின் சூப்பர் டூப்பர் டிவிக்கு வெளிநாட்டில் இருந்து ஒளிபரப்பு உபகர ணங்கள் இறக்குமதி செய்தபோது அந்நிய செலவாணி மோசடியில் ஈடுபட்டதாக சுதாகரன் மற்றும் பாஸ்கரன் மீது தொடரப்பட்ட வழக்கில் 20 ஆண்டுக்கு பிறகு கடந்த மாதம்  எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இருவர்மீதும்  குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து சாட்சிகளிடம் குறுக்கு விசாரணைக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும்  நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுதாகரன், பாஸ்பரன் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களின் நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் சாட்சியிடம் கேட்பதற்கான கேள்விகள் தயாரிக்க முடியவில்லை என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக நகல்கள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது அமலக்கத்துறை சார்பில், இந்த வழக்கில் முன்னதாக ஆஜராகிய வழக்கறிஞர் தண்டபாணி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற காரணத்தால் புதிய வழக்கறிஞர் இன்னும் நியமிக்கப்படவில்லை .எனவே 2 வார கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

இதனையடுத்து நீதிபதி வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.