பாலிவுட் திரையுலகில் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அக்‌ஷய் குமார் தனது கனடிய குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமை பெற்றுள்ளார்.

இந்திய குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்கர்களும் மேலும் பல வெளிநாட்டினர்களும் விண்ணப்பித்துள்ள நிலையில் அக்‌ஷய் குமாருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷய் குமார் சுதந்திர தின வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

இந்திய குடியுரிமை பெறாமல் இந்தியாவில் வாழ்ந்து கொண்டு வந்த அக்‌ஷய் குமார் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சயானதை அடுத்து அவர் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.