லக்னோ:

சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற தலைவராக  அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஒருமனதாக சட்டப்பேரவை மற்றும் மேலவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக நேற்று முன்தினம் சமாஜ்வாடியின் சட்டப்பேரவை தலைவராக கட்சியின் மூத்த தலைவரான எம்எல்ஏ ராம் கோவிந்த் சவுத்ரியை அகிலேஷ் யாதவ் பரிந்துரை செய்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இ்ந்நிலையில் அசம் கான் மற்றும் சிவ்பால் ஆகியோர் சட்டப்பேரவை தலைவர் பதவிக்கான போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற நிலையில் அகிலேஷ்யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிருப்தியில் இருக்கும் அசம் கானும் சிவ்பால் யாதவும் கட்சியிலிருந்து விலக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.