டில்லி,

டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி இன்று 16-வது நாளாக தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று பாம்புகறி சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், போராட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த விவசாயி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், போராடும் விவசாயிகளை சந்திக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் நாளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Dailyhunt