இன்று 16வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள் பாம்புக் கறி போராட்டம்!

Must read

டில்லி,

லைநகர் டில்லியில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 16வது நாளை எட்டியுள்ளது.

நேற்று,  மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங் மற்றும் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து முறையிட்டும், எந்தவித உறுதியும் கிடைக்காத நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அரை நிர்வாணமாக தமிழக விவசாயிகள்  இன்று 16வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராடி வரும் தமிழக விவசாயிகள் பாம்புக் கறி சாப்பிட்டு தங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.

தங்களது மீதான விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கூடுதலாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு வட மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில்,  தமிழகம் முழுவதிலும் இருந்து தற்போது இளைஞர்களின்  ஆதரவு பெருகி வருகிறது.

தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போன்று மீண்டும் ஒரு போராட்டம் நடைபெறக்கூடியது சூழல் உருவாகி வருகிறது.  எந்த நேரத்திலும் போராட்டம் வெடிக்கலாம் என்ற நிலையில், மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத வரை ஜந்தர் மந்தரை விட்டு அகல மாட்டோம் என்று விவசாயிகள் உறுதியுடன் போராடி வருகின்றனர்.

More articles

Latest article