அஜித் நடித்த வலிமை திரைப்படம் நேற்று வெளியானது. தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான திரையங்குகளில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது.

தமிழ் நாட்டை பொறுத்தவரை விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் ஒரே நாளில் 32 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த சாதனையை தமிழகத்தில் முதல் முறையாக அதிக திரையரங்கில் ரிலீசான படமான வலிமை முறியடித்திருக்கிறது.

வலிமை படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 33.5 கோடி என்று திரைத்துறையினர் கூறி வருகின்றனர். மேலும் அதிகளவு முன்பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகவும் வலிமை உள்ளது.

அதேபோல், கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூலான அண்ணாத்த படத்தின் சாதனையையும் வலிமை முறியடித்திருக்கிறது.

படம் குறித்த விமர்சனங்கள் பல்வேறு விதமாக இருந்தாலும் இரண்டரை ஆண்டுகள் கழித்து அஜித் திரைப்படம் திரைக்கு வந்ததில் ரசிகர்கள் காட்டிய ஆர்வம் காரணமாக வசூலில் சாதனை படைத்திருக்கிறது.