கோவை: டிக்டாக் புகழ் சிக்கந்தர் ஷாவை தொடர்ந்து, அவரது ஜோடியான ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த  சுப்புலட்சுமி என்கிற சூர்யா (வயது 35).  அவர் டிக்டாக் பிரபலம்.  ரவுடி பேபி என்ற பெயரில் ஆபாசமாக டிக்டாக் பதிவு செய்து வந்ததால் அவர்மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன. அதுபோல,  அவரது நண்பரான மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்த்த சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா (45) என்பவரும் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்திய யூடியூப் சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக  தகாத முறையில் விமர்சித்தனர்.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில், ரவுடி பேபி மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மதுரை அருகே பதுங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, நண்பர் சிக்கந்தர்ஷாவை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில்   சிக்கந்தர்ஷாவை மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில், தற்போது ரவுடி பேபி சூர்யாவையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக  கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய கலெக்டர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.