சென்னை:

ஜீத் குமார் தனது மகன் ஆத்விக்கின் பள்ளிக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் அஜீத் மீண்டும் சிவாவுடன் இணைந்து புதிய படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்திற்கு விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜீத் தனது ஒரிஜினல் கேரக்டருடன் இல்லாமல், கருப்பு நிற முடியுடன் இளமையாக தோற்றமளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அஜீத் ரசிகர்கள் இப்போதே தனது ‘தல’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை காண ஆவலோடு இருக்கிறார்கள்.

இந்நிலையில், அஜீத்தின்  குழந்தைகள் ஆத்விக் என்ற பள்ளியில் படித்து வருகிறார்கள். சமீபத்தில் அங்கு நடைபெற்ற பள்ளி விளையாட்டு போட்டியை காண சென்ற அஜீத், தனது மகனை தூக்கிச் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், மகன் போட்டியில் பங்குபெற்று ஓடுவது போன்ற புகைப்படமும், மற்ற பெற்றோர்களை போல அஜீத்தும் தனது மகனுடன் சாதாரணமாக இருப்பது போன்ற புகைப்படமும்  சமூக வலைதளங்களில் பகிரக்கப்பட்டு வருகிறது.

அஜீத்தின் இயல்பான செயல்பாடுகள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.