அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது.

வலிமை திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்தப் படத்தின் இயக்குனர் எச். வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் தனது மூன்றாவது படம் #AK61 குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அஜித்.

ஏற்கனவே அஜித் குமார், போனி கபூர், எச். வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது.

#AK61 படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்ததாக #AK62 குறித்த அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

#AK62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் சமூக வலைதளத்தில் ஏற்கனவே பகிரப்பட்ட நிலையில் நாளை இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.