ரசிகர்களின் ‘விஸ்வாசம்’ குறித்து அஜித் நெகிழ்ச்சி: ரோபோ ஷங்கர்

Must read

சென்னை:

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்காக அஜித் ரசிகர்களின் உழைப்புக்கு நன்றி கடமை பட்டிருப்பதாக  அஜித் நெகிழ்ச்சியுடன் கூறியதாக, அவருடன் நடித்த நடிகர் ரோபோ ஷங்கர் கூறி உள்ளார்.

மிழகம் முழுவதும் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்ப சென்டிமென்டான இந்த படத்திற்கு மக்களி டையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.விஸ்வாசம் படத்திற்காக அவரது ரசிகர்கள் வித்தியாசனமான பேனர்களை வைத்து விளம்பரப்படுத்திய நிலையில், நடகடலிலும் சென்று பேனர் வைத்தனர். இது வெகுவாக பேசப்பட்டது.

இந்த நிலையில், அஜித்துடன் நடித்த ரோபோ சங்கர், அஜித் குறித்து நெகிழ்ச்சி யான தகவல்களை தெரிவித்துள்ளார். படத்தன் வெற்றிக்காக உழைக்கும் ரசிகர்களுக்கு என்ன செய்யப்போகிறேன் என்று அஜித் நெகிழ்ந்தாகவும் கூறி உள்ளார்.

சத்திய ஜோதி மூவிஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கிய விஸ்வாசம் படம் பொங்கலையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தில் அஜித் உடன் நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் வெளியான நிலையில், இரு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில்  ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன் நடித்த ரோபோ ஷங்கர், அஜித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருடன் அஜித் பகிர்ந்துகொண்ட தகவல் குறித்து ரோபா  கூறியிருப்பதாவது,

அஜித்திடம் நான்,  கடவுள் எனக்கு 75 வயசு வரை ஆயுள் கொடுப்பதாக இருந்தால், அதில் எனக்கு 60 வயசு போதும். மீது 15 எடுத்து உங்களுக்கு கொடுத்துவிடு என்று சொல்லிருவேன் என்றேன்… கோடான கோடி ரசிகர்களும் இதைதான் சொல்லு கிறார்கள் என்றும் தெரிவித்தேன்… ஆனால், அஜித்… என்ன சார் நீங்க… இப்படி யெல்லாம் பேசுறீங்கள்  என்று நெகிழ்ந்தார் என்று கூறினார்.

அஜித் சாருக்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும். அஜித் சாரிடம் அடுத்து எப்போ சார் மீட் பண்ணுவோம் என்று கேட்டேன். கண்டிப்பா நம்ம நிறைய பண்ணப் போறோம் ரோபோ ஜி என்றார். அதற்கு நான் நன்றி தெரிவித்தேன் என்றவர்…

அஜித்துக்கு அவரது ரசிகர்கள்… நடுக்கடலில் பிளக்ஸ் வைக்கிறார்கள்…  வேறு  எந்த நடிகருக்கு இப்படி  ப்ளக்ஸ் வைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய ரோபா… அஜித் சார்… ரசிகர்கள் செய்யும் அனைத்து விஷயங்களையுமே கவனித்து வருவதாகவும்…  ரொம்பவே சந்தோஷப்படுகிறார்…. என்றவர் இதுதொடர்பாக  நிறைய முறை  பேசியிருக்கேன்….  ரசிகர்கள் தன்மீது  இவ்வளவு அன்பு வைச்சுருக்காங்க.. . இதற்கு என்ன பண்ணப் போறேன்…. என்று தெரியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், இவ்வளவு ஆபரேஷனிலும் நான் எழுந்து நடிக்கிறேன், நடக்கிறேன், ஆடுறேன், பாடுறேன் என்றால் அனைத்துமே அவர்களுடைய ஆசி தான் ரோபோ ஜி என்றவர்,  இவ்வளவு ரசிகர்களை நான் அடுத்தடுத்த படங்கள் கொடுத்து எப்படி சமாளிக்கப் போறேன்… ரசிகர்களுக்கு  கண்டிப்பா ஏதாவத பண்ணனும் என்றும் அஜித் கூறியதாக  ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்

More articles

Latest article