மொபைலினால் நட்பு கெடுகிறது : டிவிட்டரில் பிரபல பாடகி ஆஷா போஸ்லே

Must read

மும்பை

மொபைல் போனால் ஒருவருக்கொருவர் நட்புடன் பேசிக் கொள்வது கெடுவதாக பிரபல பாடகி ஆஷா போஸ்லே குற்றம் சாட்டி உள்ளார்.

இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே.   இவர் இந்தியில் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிப் படங்களிலும் பின்னணி பாடி உள்ளார்.   இவர் தமிழில் பாடிய செண்பகமே செண்பகமே பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் உள்ள பாடலாகும்.

இவர் சமீபத்தில் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் சும்மா அமர்ந்திருப்பது போலவௌம் அவரைக் காண வந்தவர்கள் அவரை கவனியாமல் மொபைல் போன்களையே பார்த்துக் கொண்டிருப்பதாகவும் உள்ள படம் வெளியாகி உள்ளது.

அந்த பதிவில் அவர், “பக்டோராவில் இருந்து கொல்கத்தா வரை.    நல்ல நண்பர்கள்.   ஆனால் ஒருவரும் பேசிக் கொள்ளவில்லை.   அலெக்சாண்டர் கிரகாம் பெல்லுக்கு நன்றி” என பதிந்துள்ளார்.

முதலில் தொலைபேசியை உருவாக்கியவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆவார்.     அதன் பிறகு மொபைலை கடந்த 1973 ஆம் வருடம்  மார்டின் கூப்பர் என்பவர் உருவாக்கினார்.

More articles

Latest article