கோவை:
வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்குவேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் ரஜினி படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆம் என சொல்லாமல் தலையாட்டிய லோகேஷ் கனகராஜ், “அதற்கான அறிவிப்பு தயாரிப்பு தரப்பிடமிருந்து வெளியாகும்” என தெரிவித்துள்ளார். இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை வைத்தும் படம் பண்ணுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.