நெல்லை:
நெல்லை, பெருமால்புரம் அருகே தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாமல் இருந்ததாக அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், 7 நாட்களில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இதுபோன்று செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.