மும்பை

ஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.

 

அஜித் பவாருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கும் உடனான மோதலால் கட்சியை அஜித் பவார் உடைத்தார். இதையொட்டி தேசியவாத காங்கிரசிலிருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர்.

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.  இன்று அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு மகாராஷ்டிரா ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கனவே முதல்வராகப் பதவி ஏற்றபோது அஜித் பவாரும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.  அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

இன்று மராட்டிய மாநிலத்தில் 8ஆவது துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள அஜித் பவார் கடந்த 2019ல் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிரா துணை முதல்வராகப் பதவியேற்று பின்னர் விலகினார். பதவியேற்ற 80 மணிநேரத்தில் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.

அதன் பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட மகா விலாஸ் அகாதி கூட்டணியில் இணைந்து அஜித் பவார் மீண்டும் துணை முதல்வர் ஆனார்.