புதுடெல்லி:
ர்வதேச விமானங்களில் மது வழங்கும் சேவையை ஏர் இந்தியா, மறுஆய்வு செய்ய உள்ளதாக அதன் சிஇஓ கூறினார்.

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன், விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவத்திற்கு பிறகு சர்வதேச விமானங்களில், அதன் ஆல்கஹால் வழங்கும் சேவையை விமான நிறுவனம் மறு பதிப்பாய்வு செய்ய உள்ளதாக கூறினார்.

நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து ஒரு விமானத்தில் பயணித்த சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த சம்பவத்திற்காக, வில்சன் மன்னிப்பு கேட்டார். மேலும் நான்கு கேபின் பணியாளர்கள் மற்றும் ஒரு பைலட் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

எங்கள் விமானத்தில் சக பயணிகளின் இந்த கண்டிக்கத்தக்க செயல்களால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள விசயத்தில் ஏர் இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதற்காக நாங்கள் வருந்துகிறோம் மற்றும் வேதனைப்படுகிறோம், என்று காம்ப்பெல் வில்சன் கூறினார்.