சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள், கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு தொடர்பான மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்து, இந்த மசோதாவை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அவையைவிட்டு வெளியே வந்த அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையின் எதிரே உள்ள வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அவர்கள் காவல்துறையினர் கைது செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்து, வாகனத்தில் அழைத்துச்சென்றனர்.
[youtube-feed feed=1]