சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, கடத்தல் மற்றும்  காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, மாணவியின் தந்தையார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவி சவுந்தர்யாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

38வயதான கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு,  அந்த பகுதியைச் சேர்ந்த கோவில்குருக்களின் 19 வயது மகளை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வயது வித்தியாசம் மட்டுமின்றி, மாணவி கடத்திச்செல்லப்பட்டு, மணம் செய்து கொண்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை காவல்துறை ஏற்க மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத்தில், மாணவியின் தந்தை சுவாமிநாதன், , ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், எனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்தி உள்ளார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புகார் கொடுத்ததைத் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே மாயமான எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து எம்எல்ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யாவையும், அவரது தந்தை சுவாமிநாதனையும் நாளை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.