மதுரை: அதிமுக பொன்விழா மாநாட்டை வெற்றிகரமாக அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நடத்திய காட்டியுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைமுதல்வரான ஒபிஎஸ்,  எடப்பாடி பழனிச்சாமியை  கடுமையாக விமர்சனம் செய்ததுடன், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தங்களது அணி போட்டியிடும் என அறிவித்து உள்ளார். மதுரை அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது

அதிமுகவில் எழுந்த சலசலப்புக்கு மத்தியில், அதிமுகவை முழுமையாக கைப்பற்றி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் பொதுச்செயலாளருக்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். இதற்கிடையில், அதிமுக தொடங்கி 50ஆண்டுகளை கடந்த  நிலையில், அதிமுக பொன்விழா மாநாட்டை மதுரையில் கூட்டி, தனது பலத்தை நிரூபித்துள்ளார். இதற்காக, மதுரையில்,  சுமார்  லட்சம் தொண்டர்கள்  கலந்துகொண்ட வகையில் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்.

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தனது பலத்தை எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு நிரூபிக்கும் வகையில், இந்த மாநாடு நடத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களைக்கொண்டு கூட்டம் நடத்திய ஒபிஎஸ்,  மதுரையில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் தொண்டர்கள் யாரும் சரியாக சாப்பிடவில்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவலை தெரிவித்துள்ளார்.  மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த புரட்சித்தமிழர் பட்டத்தை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்  மதுரை மாநாடு முற்றிலும் தோல்வியை தழுவியுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்

மாநாட்டில் இபிஎஸ் போட்ட வேடம் கலைந்து விட்டது என்று விமர்சித்த அவர், உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள், நாங்கள் யார் என்று தெரியும் என்றார்.

சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் ஓ.பி.எஸ் -அணியின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய  ஓபிஎஸ்  அணியின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்,  “நாடாளுமன்ற தேர்தல் பணிகளை எந்த கட்சி தொடங்குகிறதே, தொடங்கிவில்லையோ அதைப்பற்றி நமக்கு தேவை இல்லை. நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நாம் செய்ய வேண்டும். யாருக்காகவும் காத்திருக்க கூடாது. இரு தரப்பும் ஒன்று சேர்ந்தால் கட்சி ஒற்றுப் போகும். ஆனால் அவர்கள் சமாதானத்திற்கு ஒத்துப் போக மாட்டார்கள். நாங்களும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

பொதுச்செயலாளர் என்பது தேர்தல் கமிஷன் தான் முடிவு எடுக்க வேண்டும் . பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்று இன்னும் நிலுவையில் தான் உள்ளது. இரட்டை இலை இருவருக்கும் பொதுவாக தான் உள்ளது. இன்னும் இரட்டை இலை ஒருவருக்கு தான் என்று முடிவு செய்யவில்லை அதை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செப்டம்பர் 3 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்று பயணம் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சியினை தொண்டர்களை நேரில் சந்திக்க உள்ளார் என அவர் தெரிவித்தார்.

பின்னர்  பன்னீர்செல்வம் பேசும்போது,  “மறைந்த முன்னாள் முதலமைச்சர் கொண்டுவந்த சட்ட விதிகளை எடப்பாடி பழனிச்சாமி மதிக்கவில்லை. எங்கள் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாடு தமிழ்நாட்டை மட்டுமின்றி டெல்லியையே திருப்பி பார்க்க வைத்தது.

அடுத்தாண்டு நாடாளுமன்ற நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு பகுதியில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அந்த பணி இன்னும் ஒரு மாதத்திற்க்குள் முடிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இருக்கும் உறுப்பினர் பெயர் பட்டியல் முழு விவரங்களை விரைவில் எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் தேர்தலில் யாரை நிற்க வைக்க வேண்டும் என தெரியும்.இந்த பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோமா இல்லையா என்று பேசுகிறார்கள் ஆனால் கண்டிப்பாக நாம் போட்டியிடுகிறோம். நாங்கள் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கும் காரணம் தமிழ்நாட்டில் முன்னாள் தலைநகரம் காஞ்சிபுரம்.அதனால் தான் நாங்கள் காஞ்சிபுரத்திலிருந்து பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், மதுரை மாநாடு தோல்வி அடைந்துள்ளது என்றார்.