சென்னை: அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என செய்தியளார்களை சந்தித்த ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தனர். ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும், பிக்பாக்கெட் அடிப்பதுபோல பொதுச்செயலாளர் பதவியை பெற எடப்பாடி  நினனைக்கிறார் என ஓபிஎஸ் கூறினார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டது சரிதான் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். அதன் தொடர் நடவடிக்கையாக அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது.

அதிமுகவின் சட்டதிட்ட விதி (20), பிரிவு -2-இல் குறிப்பிட்டுள்ளவாறு அதிமுக பொதுச்செயலா் பதவிக்குக் கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப் படுவா். இந்த விதிமுறைக்கு ஏற்ப பொதுச்செயலா் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலர் தேர்தல் வரும் (மாா்ச்) 26-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  பொதுச்செயலா் பொறுப்புக்குப் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, சட்டவிதி 20 அ , பிரிவு (ஏ), (பி), (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பூா்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அறிவித்தது. திமுக தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ளது. முதல்நாள இன்றே துச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எடப்பாடி பழனிசாமி  இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி போடியிட்டின்றி தேர்வு ஆக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

எடப்பாடி தரப்பின் இந்த திடீர் நடவடிக்கை ஓபிஎஸ் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியளார்களிடம் பேசிய   பண்ருட்டி ராமச்சந்திரன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்றும் தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.

அதிமுக சட்ட விதிகளை பின்பற்றாமல் திடீரென  விருப்பத்திற்கேற்ப தேர்தலை அறிவித்துள்ளது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல் என சாடியவர், எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கையை சட்டரீதியாக சந்திக்க தயாராகி வருகிறோம்.  மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் இறுதி வரை உடன் இருந்தவர்கள் நாங்கள் என்று கூறினார்.

ஈரோடு தேர்தலில் தோல்வி அடைந்தபிறகும், எடப்பாடி தரப்பு திருந்தவில்லை என்று கூறியதுடன், அதிமுகவை சீரழிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  தமிழ்நாட்டில் இவரை விட சர்வாதிகார அரசியல்வாதி, யாரும் இருக்க முடியாது. எங்களை கட்சியிலிருந்து நீக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது.

மாவட்டந்தோறும் சென்று அதிமுக தொண்டர்களை சந்திக்க உள்ளதாக கூறிய ஓபிஎஸ், இபிஎஸ் ஒரு சர்வாதிகாரி என கடுமையாக விமர்சித்ததுடன், ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். பிக்பாக்கெட் அடிப்பதுபோல பொதுச்செயலாளர் பதவியை பெற எடப்பாடி தரப்பு நினைக்கிறது, உரிய விதிகளிடன் படி தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

கட்சி இந்த நிலைமையில் இருக்க நாங்கள் காரணம் இல்லை, யார் காரணம் என மக்களும், தொண்டர்களும் நன்கு அறிவார்கள் என தெரிவித்தார்.  ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம். எங்கள் பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.