நீதிமன்றம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கட்டி தழுவிய காட்சி! வீடியோ

Must read

சென்னை: ஜாமின் மனு மீதான விசாரணைக்காக  நீதிமன்றம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை,  முன்னாள் அதிமுக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கட்டி தழுவி வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

19ந்தேதி கள்ளஓட்டுப் போட வந்த தி.மு.க. உறுப்பினர் நரேஷ் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

இதையொட்டி சிறையில் இருந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் நீதிமன்றம் அழைத்து வந்தனர். அப்போது, ஏராளமான  அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கட்டி தழுவி வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ வைலாகி வருகிறது.

More articles

Latest article