சென்னை: தமிழ்நாட்டில் 10வது, 12வது வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை   அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று குறையத்தொடங்கியதைத் அடுத்து, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் பிப்ரவரி மாதம் முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், மாணாக்கர்களுக்கு தேர்வுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின. ஆனால், பொதுத்தேர்வுகள் நேரடித் தேர்வாகவே நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து வந்தது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மாலை சரியாக 4 மணிக்கு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த  இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு பொதுத்தேர்வை நடத்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முனைப்பு காட்டி வரும் நிலையில், தமிழகத்திலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியவர், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.