இன்று அதிமுக செயற்குழு கூட்டம்! 5ந்தேதி ஜெ.நினைவு நாளன்று நினைவிடத்தில் அஞ்சலி…

Must read

சென்னை: இன்று அதிமுக செயற்குழு கூட்டம் இன்று அதிமுக தலைமை  அலுவலகத்தில் கூடுகிறது. இதையடுத்து வரும் டிசம்பர்  5ந்தேதி ஜெ.நினைவு நாளன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவித்து உள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  மேலும் 5ந்தேதி மறைந்த அதிமுக பொதுக்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் நினைவு நாளை சிறப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அதிமுக கழக நிரந்தரப் பொது செயலாளர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article