சென்னை: 
.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, கட்சியின் கொள்கைக்கு முரணாகச் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அன்வர்ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.