புதுடெல்லி:

2013-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் பேர முறைகேடு வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையை ஊடகங்களுக்கு கசியவிட்டதற்காக, அமலாக்கத்துறையை டெல்லி நீதிமன்றம் கண்டித்துள்ளது.


கடந்த 2013-ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்லேண்ட் நிறுவனத்திடம் முக்கிய விவிஐபிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்க பேரம் நடத்தப்பட்டது.

இதில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, வழக்கு நடந்து வருகிறது.

டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகையை அமலாகத் துறை தாக்கல் செய்தது.

இதன் நகல் ஊடகங்களுக்கு தரப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதனையடுத்து, அமலாகத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுபோல் எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என அமலாக்கத்துறை அதிகாரிகளை நீதிமன்றம் எச்சரித்தது.

நீதிமன்ற ஊழியர்கள் தான் நகல் பிரதியை ஊடகங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்ற அமலாக்கத்துறையின் விளக்கத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.