ஜெய்ப்பூர்:

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்  ரூ. 3
லட்சம் கோடி முதல் ரூ. 5
லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தி குயின்ட் இணையத்துக்கு பாபா ராம்தேவ் அளித்த பேட்டியில், வங்கி அதிகாரிகளால் பிரதமர் மோடி தவறாக நடத்தப்பட்டுள்ளார்.

அவர்கள் பேச்சை கேட்டு பண மதிப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்தார். இதனால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது.

வங்கிகளின் ஊழல் அதிகாரிகளின் பிடியில் மோடி சிக்கிக் கொண்டார். பண விநியோகம் பிரச்சினை இல்லை. ஆனால், எல்லா பணமும் ஊழல் பணமாக மாறிவிட்டது.

ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருந்தபோதும், இது போன்ற தவறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது துரதிஷ்டம். இது நம் அரசமைப்பு முறை மீது கேள்வி எழுப்பியுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் பல கோடிகளை சம்பாதித்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பிரதமர் மோடிக்கு பாபா ராம்தேவ் மிக நெருக்கமாக இருந்தார்.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக குற்றஞ்சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.