க்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் இன்று முதல் தொடங்குவதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தும் வேளையில்,  வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறி உள்ளது.

தமிழகத்தில் இன்று தொடங்கி உள்ள அக்னி நட்சத்திரம், வரும் 28ந்தேதி வரை நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த காலங்களின் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகஅளவில் காணப்படும்.

பொதுவாக அக்னி நட்சத்திரத்தின்போது சுட்டெரிக்கும் வெயிலானது 21 நாட்கள் தொடரும் என்பது நம்பிக்கை. ஆனால், தற்போதைய காலங்களிலோ அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னnu அதைவிட கொடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது.

ஆனால், இந்த  அக்னி நட்சத்திரம் எவ்வாறு பிறந்தது… அதுகுறித்து புராணங்கள் என்ன சொல்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்…

முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி முனிவர்கள் சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது உடலில் கொழுப்பு அதிக அளவில் சேர்ந்ததாம்.

அந்த கொழுப்பைக் குறைக்க வேண்டுமென்றால், அக்னி பகவான், ஒரு காட்டையே  அழித்து அந்த நெருப்பைத் தின்ன வேண்டுமாம். அதற்காக  அக்னி பகவான் காண்டவ வனம் என்ப பகுதியை  தேர்ந்தெடுத்தானாம்.

ஆனால், அக்னி தேவன் அந்த வனத்தை எரித்தால், அவ்வனத்தில் வாழ்ந்து வரும் அரக்கர்களும், விலங்கு களும் தாவரங்களும் தீயில் கருகி நாசமாகிவிடும் என நினைத்து,  தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டதாம்.

அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த வருண பகவான், “அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்’ என உறுதி அளித்தாராம்.

இந்த தகவலை தெரிந்துகொண்ட, காக்கும் கடவுள்  கிருஷ்ணரிடம் சென்று, “நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்’ என முறையிட்டாராம்.

உடனே கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார்.  அர்ச்சுனன்  உடனே அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டி மழைநீர் தரைக்கு வராதவாறு தடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் அக்னி தேவன் தனது ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கிருஷ்ணர், “21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்’ என்று உத்தரவிட்டாராம்.

அதன்படி அக்னிதேவன்,  காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசியை தணித்துக்கொண்டானாம். அந்த  21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இந்த கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் இருந்த தப்பிக்க முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது. மேலும், பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும் வழிபடு வதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.