கொளப்பாக்கம் அகத்தீசுவரர் கோயில் இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள, 1300 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும்.

 

இக்கோவிலில் உள்ள தெய்வம் சிவன், ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படுவது ஸ்ரீ சூரிய பகவானாக கருதப்படுகிறது.

இக்கோவிலில் உள்ள தெய்வம் சிவன், ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படுவது ஸ்ரீ சூரிய பகவானாக கருதப்படுகிறது. ஏனெனில்ஸ்ரீ சூர்ய பகவான் இங்கு சிவனை வழிபட்டுள்ளார். இது ஸ்ரீ சூர்ய பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சென்னையில் காணப்படும் நவகிரக கோவில் ஒன்றாகும். புராணக்கதைகளைப் போலவே, ஸ்ரீ சூர்ய பகவான் சன்னதி மேற்கு நோக்கி முகம் திருப்பிக் கொண்டிருக்கும் கோயிலின் கட்டடமாகும். அதே நேரத்தில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி முகம் அருள்பாளித்துள்ளார். ஆலய கட்டிடம் தெற்கே உள்ளது.

சிவன் சன்னதிக்கு அருகே அம்பாள் ஸ்ரீ ஆனந்தவள்ளி தாயார் நின்ற கோலத்தில் அருள்பாளிக்கின்றார். நந்தி பக்தர் சிவனை நோக்கி கிழக்கே நோக்கியும் அருள்பாளிக்கின்றார்.

ஸ்ரீ கணேசன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி , ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ துர்க்கை மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் போன்ற பிற தெய்வங்கள் கருவறைக்கு அருகில் காணப்படுகின்றன.மகா கணபதி என அறியப்படும் விநாயகர் ஒரு தனி சன்னதி உள்ளது.

கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ விசாலாட்சி ஆகிய கோயில்களும் கிழக்கு நோக்கி எதிர்கொண்டுள்ளன. இக்கோவிலில் உள்ள சுப்பிரமணியர் ஆலயம், மரகத கல் எனப்படும் கிரானைட் கொண்டு செய்யப்பட்ட பச்சை மயில் உள்ளது.