வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை.

வரும் ஆகஸ்ட் 8ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. பாலிவுட்டில் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கா இப்படம் உருவாகியுள்ளது..

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போனி கபூர் தயாரித்துள்ளார்.

முதலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வானில் இருள் பாடல் லிரிக் வீடியோ வெளியானது. தொடர்ந்து 2ஆவது சிங்கிள் டிராக் ஈடிஎம் (EDM) என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இந்த நிலையில், 3ஆவது லிரிக் வீடியோ தீ முகம் தான் என்ற அதிரடி ஆக்‌ஷன் பாடல் லிரிக் வெளியானது.

தற்போது, அகலாதே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், அஜித் மற்றும் வித்யா பாலன் ஆகியோர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.