சென்னை: தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முடிந்ததும், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும்  கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்துரு, அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டடு. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் முதல் பட்ஜெட் என்ற பெருமையையும், முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் என்ற பெருமையையும், இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த 2021-22ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பெற்றுள்ளது.

காகிதமில்லா இ-பட்ஜெட்டை   தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் 3 மணி  இடைவிடாமல் வாசித்தார். அப்போது, இந்த பட்ஜெட் தற்போதைய நிதியாண்டின், எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என்று கூறினார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சட்டப்பேரவை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து அவையில்இருந்து வெளியேறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று  மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து பேரறிஞர் அண்ணா சமாதிக்கும் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.