ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெயரில் மோசடி நடந்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்

என்று அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.

ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் ரூ. 2 கோடி பண மோசடி…