சினகுடி

நீலகிரி மாவட்டத்தில் 21 நாட்களாகத் தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டு கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது/

புலிகள் காப்பகத்தில்  உள்ள புலிகளைக் கணக்கெடுக்கும் போது ஒவ்வொரு புலிக்கும் ஒரு எண அளிக்கப்படுகிர்றது.  அவ்வகையில் முதுமலை  வனப்பகுதியில் உள்ள ஒரு புலிக்கு டி23 என்னும் எண் அளிக்கப்பட்டது.  சுமார் 13 வயதாகும் இந்தப் புலி கடந்த ஆண்டு மசினகுடியில் கவுரி என்னும் பெண்ணைக் கொன்றது.  பிறகு அங்கிருந்து கூடலூர் பகுதிக்கு சென்று இருவரை அடித்துக் கொன்றது.

அந்தப் புலி ஏராளமான கால்நடைகளை கொன்றதுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேலும் ஒருவரை அடித்துக் கொன்றது.   இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் புலியைச் சுட்டுக் கொல்ல கோரி போராட்டம் நடத்தினர்.  வனத்துறை புலியைச் சுட்டுக் கொல்ல முடிவெடுத்தும் உயர்நீதிமன்றத்தில் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கினால் புலியைச் சுடத் தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி கடும் போராட்டத்துக்குப் பின் புலி பிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள், ”மயக்க ஊசி செலுத்தியும் தப்பித்த டி 23 புலி நேற்று இரவு  தெப்பக்காடு – மசனகுடி சாலையில் வருவதாகத் தகவல் வந்தது. உடனடியாக, மருத்துவக் குழு மற்றும் தேடுதல் குழு அந்த இடத்துக்குச் சென்று புலி கண்காணிக்கப்பட்டது. அந்தப் புலி சாலை ஓரத்தில் வருவதும், மீண்டும் புதருக்குள் செல்வதுமாய் இருந்தது.

பிறகு புலி மசினகுடி பகுதி, கூல் பிரீஸ் ரிசார்ட் அருகிலிருக்கும் வனப்பகுதிக்கு வந்துள்ளதாகத் தெரிந்ததால் உடனடியாக, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து, இன்று யாரும் அந்தப் பகுதிக்கு மாடு மேய்க்கவோ மற்றும் வனத்துக்குள் செல்லவோ கூடாது என்று அறிவிப்பு செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் வனப் பணியாளர்களும் அந்தப் பகுதியில் யாரும் உள்ளே செல்லாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  மதியம் புலி மாயார் சாலையில் நடமாடுவதாக வந்த தகவலை அடுத்து, அங்கு வனத்துறையினர் சென்றனர். அங்குள்ள புதரில் புலி சென்றது. இந்த புதரைச் சுற்றி வளைத்த வனத்துறையினர், புலி வெளியில் வரும் வரை காத்திருந்தனர்.

புலிக்கு புதரை விட்டு வெளியே வந்ததும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அந்தப்  புலி மயக்கமடைந்ததும் அதை வலைகள் கொண்டு கட்டி, கூண்டில் ஏற்றி உள்ளோம் ஏற்கனவே மயக்க ஊசி செலுத்தியும் தப்பித்த  இந்தப் புலிக்குச் சிகிச்சை அளித்து சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்துப் பராமரிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.