‘சிங்கங்கள் மீண்டும் கர்ஜித்தன…!’ சிஎஸ்கே வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின் சிலாகிப்பு…

Must read

சென்னை: 4வது முறையாக ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும், சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணியின் வெற்றியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலாகித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.  மன்னர்கள் (Kings) மீண்டும் கர்ஜித்துள்ளன என்று பெருமிதமாக வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

2021ம் ஆண்டு ஐபில் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில், கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் துபாயில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய அனைத்து ஆட்டங்களில் பிரமாதமாக ஆடி புள்ளி பாய்ண்டில் முதலிடத்தில் தொடர்ந்து வந்தது. அதையடுத்து நேற்று சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைரடர்ஸ் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி துபாய் ஸ்டேடியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியை உலகம் முழுவதும் இருந்து பலகோடி போர் நேரலையில் கண்டுகளித்து வந்தனர்.

இந்த போட்டியின்போது டாஸை இழந்த நிலையில், சிஎஸ்அணி பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. சிஎஸ்கே அணி வீரர்கள் அபாரமாக ஆடி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பாப் டு பிளஸ்சிஸ் 86 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி முதல் 10 ஓவர்களில் 88 ரன்கள் சேர்த்து நல்ல நிலையில் இருந்தது. 11-வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷர்துல் தாக்கூர் ஆட்டத்தை சென்னை அணி பக்கம் கொண்டு வந்தார்

தொடர் விக்கெட் வீழ்ச்சியை சந்தித்த கொல்கத்தா அணி 20-வது ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்று 4-வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில்,  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

மீண்டும் ஒருமுறை சென்னை சிங்கங்கள்  கர்ஜணையை வெளிப்படுத்தி  உள்ளது.  நான்காவது முறையாக IPL கோப்பையை வென்ற ஒவ்வொரு CSK வீரர் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்.

மேலும்,  இந்த வெற்றியை கொண்டாட தோனிக்காக சென்னை காத்திருக்கிறது என்றும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article