மதிய செய்திகள்

Must read

Afternoon news

 • சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு. 79 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் வழக்கு: சபாநாயகர், சட்டப்பேரவை செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
 • காவல்துறை மானிய கோரிக்கையை புறக்கணித்தது தி.மு.க. கறுப்புத்துணி கட்டி அவைக்கு வந்த திமுக எம்எல்ஏ.,க்கள் காவல்துறை மானிய கோரிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
 • சட்டசபைக்கு வராமல் கருணாநிதி விமர்சிப்பதா ?- சபாநாயகர் வேறு வழியே இல்லாததால் தான் திமுகவினரை இடை நீக்கம் செய்தேன்: தனபால் விளக்கம்.
 • காவல் துறை – தீயணைப்பு துறை மீதான மானியகோரிக்கை தாக்கல்
 • சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை. சட்டப்பேரவைக்கு செல்லும் 4வது எண் நுழைவாயில் பூட்டப்பட்டதால் செய்தியாளர்கள் கடும் அவதி
 • சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் எதிர்வரிசை காலி. தலைமை செயலகம் வழியாக பேருந்து கிடைக்காமல் பயணிகள் அவதி
 • தலைமை செயலக வளாகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு: போட்டி சட்டமன்றம் நடப்பதை தவிர்க்க முன்எச்சரிக்கை
 • சஸ்பெண்டான எம்எல்ஏக்கள் நுழைய தடை : கோட்டையில் உச்சகட்ட பாதுகாப்பு
 • சட்டசபை அலுவலகத்துக்கு வந்தால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைதாவார்கள் போலீசார் உறுதி
 • கோவை; மாணவிகள் 51 பேர் மருத்துவமனையில் அனுமதி
 • ஒரே கப்பலில் 6,316 கார்களை அனுப்பி மும்பை துறைமுகம் புதிய சாதனை! உலக நாடுகள் எல்லாம் பொருளாதார மந்த நிலையைக் கண்டு கையைப் பிசைந்தபடி நிற்கும் போது, நெருப்புடா…. என மாஸ் காட்டி கால் மேல் கால் போட்டு அமர்ந்தது இந்தியா. காரணம், சர்வதேச சமூகத்தை பயமுறுத்திய எந்த விதமான பொருளாதார சுணக்கங்களும் இந்தியாவை பாதிக்கவில்லை.
 • மும்பை துறைமுகத்தில் இதற்கு முன் இல்லாத வகையில் ஒரே நேரத்தில், அதுவும் ஒரே கப்பலில் இவ்வளவு கார்களை ஏற்றுமதி செய்தது சாதனைக்குரிய செயல் என்று மத்திய அரசும், துறைமுகக் கழகமும் ஒருசேர பெருமிதம் தெரிவித்துள்ளன.
 • கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மும்பை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா ஏற்றுமதி மையமாகத் திகழ்வதற்கு நாட்டின் உற்பத்தி அதிகரிப்பது முக்கியக் காரணம். மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்தி வரும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.
 •  பாம்பன் சாலைப் பாலத்தின் இணைப்புப் பட்டைகள் சேதம்: வாகன ஓட்டுநர்கள் அச்சம்
  32 தமிழர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் நிரூபிக்கட்டும்.. ஆந்திர அமைச்சர் திமிர் பேட்டி. செம்மரக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபித்து 32 தமிழர்களும் விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத் துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த 4ம் தேதி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத 6 சட்டப் பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் திருப்பதி 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயா, செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர வன சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தின்படி 32 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார். இதையடுத்து மீண்டும் 32 தமிழர்கள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
 • இந்நிலையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ணாரெட்டி, 32 தமிழர்களும் தவறு செய்யவில்லை என்றால் அதனை நிரூபித்து விடுதலையாகட்டும் என்று பேசியுள்ளார். செம்மரக் கடத்தல்காரர்களை கதாநாயகர்களாக ஆக்காத்தீர்கள் என்றும், செம்மரத்தை வெட்டுபவரோ, கடத்துபவரோ கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 •  திண்டுக்கல் பெரிய பள்ளபட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 100க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முற்றுகை
 • 350 கோடி மதிப்பீட்டில் 310 துணை ஆய்வாளர்கள் குடியிருப்பு கட்டப்படும் ஜெயலலிதா அறிவிப்பு. 1615 கோடி மதிப்பீட்டில் 20000 காவலர் குடியிருப்பு. 200 கோடி மதிப்பீட்டில் 526 காவல் நிலையங்கள் கட்டித்தரப்படும். சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு.
  சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் பேச துணிச்சல் இல்லையா – ஜெ.,
 • சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் 79 பேரை இடைநீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..
  சஸ்பெண்ட் செய்யப்படாத கருணாநிதி சட்டசபைக்கு வந்து விவாதத்தில் ஏன் பங்கேற்கவில்லை – செயலலிதா கேள்வி .
 • சட்டசபையில் காவல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் – திமுக புறக்கணிப்பு
 • தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
 • கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா, காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையினர் தமிழகத்தில் அமைதியைப் பேணிக்காத்துள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் பல போராட்டங்கள், நடத்தங்களை அமைதியாக நடத்த அனுமதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 • தமிழக மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் காவல்துறையினர் செயல்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article