ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் ஜியோ 4ஜி சேவை தொடங்கப்பட்டதை அடுத்து 4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 90 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகை தற்போது 4ஜி  வசதியுள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிளம்பிய புரளியையடுத்து இந்த சலுகை 4ஜி  வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும்தான் என்பதை ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது தெளிவுபடுத்தியுள்ளது.
reliancejio_previewoffer_1
ஜியோ 4ஜி சலுகையை எப்படி பெற்றுக்கொள்வது?
4ஜி  வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்கள் https://play.google.com/store/apps/details?id=com.jio.myjio&hl=en என்ற இணையதள முகவரியிலிருந்து மைஜியோ செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வெண்டும். அது ஒரு  சங்கேத எண்ணை உருவாக்கித்தரும். அந்த எண்ணுடன் உங்கள் ஸ்மார்ட்போன், அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றையும் எடுத்துக்கொண்டு ரிலையன்ஸ் டிஜிடல் மற்றும் டிஜிட்டல் எஸ்பிரஸ் மினி ஸ்டோர்களை அணுகி உங்களுக்கான ஜியோ 4 சிம்மைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதற்குப் பின் அந்த சிம்மை உங்கள் மொபைலில் பொருத்தி “அவைல் ஆஃபர்” என்ற என்ற ஆப்ஷனை தேர்வு செய்து சப்மிட் பொத்தானை அழுத்த ஜியோ ஆப் மற்றும் அது தொடர்புடைய ஜியோ ப்ளே, ஜியோ-ஆன்-டிமாண்ட், ஜியோ பீட்ஸ், ஜியோ மணி ஆகியவை உங்கள் மொபைலில் நிறுவப்படும். பின்னர் 1977 என்ற எண்ணை அழைத்து டெலி-வெரிஃபிகேஷன் செய்தபின்னர் ஜியோ ஆப் 4ஜி சலுகை உங்கள் மொபைலில் செயல்படத் தொடங்கும்.
ஜியோ 4ஜி சலுகையின் அம்சங்கள்:
2ஜி.பி டேட்டா, 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மற்றும் 100 இலவச குறுஞ்செய்தி அனுப்பும் வசதி ஆகிய வசதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. டெலி-வெரிஃபிகேஷன் செய்தபின்னர் ஜியோ 4ஜி ப்ரிவியூ சலுகையின்படி கணக்கற்ற ஹெச்.டி வாய்ஸ் மற்றும் வீடியோ கால், கணக்கற்ற குறுஞ்செய்திகள் மற்றும் கணக்கற்ற அதிவேக இண்டெர்நெட் ஆகியவற்றை ஜியோ ஆப்பிலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டுமே.
jijo
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சலுகை செயல்படும் சாம்சங் மொபைல்கள்:
கேலக்ஸி ஏ3, கேலக்ஸி  ஏ5, கேலக்ஸி ஏ5 2016, கேலக்ஸி ஏ5 டுவாஸ், கேலக்ஸி ஏ7, கேலக்ஸி ஏ7 2016, கேலக்ஸி ஏ8, கேலக்ஸி ஆல்ஃபா, கேலக்ஸி கோர் ப்ரைம், கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ், கேலக்ஸி ஜே மேக்ஸ், கேலக்ஸி ஜே1 ஏஸ், கேலக்ஸி ஜே2, கேலக்ஸி ஜே2(2016), கேலக்ஸி ஜே2 ப்ரோ, கேலக்ஸி ஜே3, கேலக்ஸி ஜே5, கேலக்ஸி ஜே5(2016), கேலக்ஸி ஜே7, கேலக்ஸி ஜே7 (2016), கேலக்ஸி கே ஜூம், கேலக்ஸி நோட் 3, கேலக்ஸி நோட் 4, கேலக்ஸி நோட் 5, கேலக்ஸி நோட் 5 டுவோஸ், கேலக்ஸி நோட் 7, கேலக்ஸி நோட் எட்ஜ், கேலக்ஸி எஸ் 5 ப்ளஸ், கேலக்ஸி எஸ் 4, கேலக்ஸி எஸ் 4 4ஜி, கேலக்ஸி எஸ்5 நியோ, கேலக்ஸி எஸ்6, கேலக்ஸி எஸ்6 எட்ஜ், கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ப்ளஸ், கேலக்ஸி எஸ்7, கேலக்ஸி எஸ்7 எட்ஜ், க்ராண்ட் ப்ரைம், ஓஎன்5, ஓஎன்5 ப்ரோ, ஓனென்7 மற்றும் ஓஎன்7 ப்ரோ ஆகியனவாகும்
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சலுகை செயல்படும் எல்ஜி மொபைல்கள்:
கே332 (கே7 எல்டிஇ), கே520டிஒய் (ஸ்டைலஸ் 2), கே520டிஒய், ஹெச்860 (எல்ஜி ஜி5), கே500ஐ (எக்ஸ் ஸ்கிரீன்), கே535டி (ஸ்டைலஸ் 2 ப்ளஸ்), எல்ஜிஹெச் 630டி (ஜி4 ஸ்டைலஸ் 4ஜி) & எல்ஜிஹெச் 442 (எல்ஜிசி70 ஸ்பிரிட் எல்டிஇ)