லண்டன்: இந்திய அணியுடன் தோல்வியை சந்தித்தப் பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஸான் மணி, கேப்டன் சர்ஃபராஸ் அகமதை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிடமிருந்து கிடைத்த தோல்வியையே மனதில் வைத்துக் கொண்டிராமல், விளையாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி, இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டுமெனவும், பாகிஸ்தான் அணியின் பக்கம் நாடே துணை நிற்பதாகவும் அவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, “இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை ஈட்டவில்லை எனில், உள்நாட்டில் மோசமான எதிர்வினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே, இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்வியை மறந்து, அடுத்துவரும் போட்டிகளில் முழு கவனத்தை செலுத்தி விளையாட வேண்டும்” என்று தனது அணியினரை எச்சரித்துள்ளார் கேட்பன் சர்ஃபராஸ் அகமது.

தற்போதைய நிலையில், பாகிஸ்தான் அணி வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்று, புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. ஜுன் 23ம் தேதி அந்த அணி தென்னாப்பிரிக்க அணியுடன் வாழ்வா? சாவா? ஆட்டத்தில் மோதுகிறது.