சென்னை

திமுகவில் ஒற்றை தலைமை தேவை என்பதற்கு மேலும் ஒரு சட்டப்பேரவை தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைவராக இருந்த ஜெயலலிதா மறைந்த உடன் கட்சித் தலைமைக்கு கடும் போட்டி ஏற்பட்டு மூன்று அணிகளாக உடைந்தன. கட்சிச் சின்னம் கைவிட்டு போகக்கூடாது என்னும் பயத்தினால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணியினர் ஒன்று சேர்ந்தனர். தினகரன் தனியாக விடப்பட்டு அமமுக என்னும் கட்சியை தொடங்கினார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக களம் இறங்கியது.   இந்த கூட்டணியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். அத்துடன் பாஜகவினர் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றனர். இதற்கு அதிமுக கூட்டணியே காரணம் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுக தலைவர்கள் பலரும் அதிமுகவுக்கு தற்போது வலுவான ஒற்றை தலைமை தேவை என கூறி வருகின்றனர். இதை மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா முதலில் கூறினார். எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் ஆகிய இருவரின் தலைமையால் கட்சி பிளவுபடக் கூடும் என அவர் எச்சரித்தார்.

ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு வரவேற்பு பெருகி வருகிறது, இந்நிலையில் குன்னம் தொகுடிசட்டப்பேரவை உறுப்பினரான ராமச்சந்திரன், “துணை முதல்வர் ஓ பி எஸ் தனது மகனுக்கு மத்டிய அமைச்சர் பதவி கேட்டதாக தகவல்கள் வருகின்றன. அது கட்சி தொண்டர்கள் பலருக்கு மன வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது,

தற்போதைய நிலையில் கட்சி பலம் அடைய வலுவான ஒற்றை தலைமை தேவை.  இரு தலைமயால் குழப்பங்கள் உண்டாகின்றன.   நான் அதிமுகவில் குழப்பத்தையோ உட்கட்சி பூசலையோ உருவாக இதை தெரிவிக்கவில்லை. எனது வருத்தத்தை பதிகிறேன்” எனதெரிவித்துளார்.

[embedyt] https://www.youtube.com/watch?v=3ontyOEGdIw[/embedyt]