கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ கீதாவை காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்வர் ஆவதற்கு வழிவிடும் பொருட்டு, தற்போதைய தமிழக முதல்வர், ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் அளித்தார். இதற்கிடையே, சசிகலா மீது குற்றம் சாட்டிய பன்னீர்செல்வம், ராஜினாமா கடிதத்தை வாபஸ்பெறப்போவதாகவும் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் தன்னை ஆதரிப்பதாக சசிகலா தெரிவித்தார். அவரது கட்டுப்பாட்டில் பல எம்.எல்.ஏக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் தடுத்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்கள், டில்லி சென்று குடியரசு தலைவரை சந்திக்க முடிவெடுத்ததாகவும், தமிழக கவர்னர் இன்று சென்னை வருவதால் அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ கீதாவை காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

கூடுதல் தகவல்:

கீதாவை காணவில்லை என்று  மனு அளிக்கப்படுவது இது முதல் முறை அல்ல.  கீதாவின் கிருஷ்ணராயபுரம் தொகுதி மக்கள், தங்கள் தொகுதி எம்.எல்.ஏவான கீதா ஓட்டு கேட்ட வந்ததோடு சரி, அதன் பிறகு அவரை காணவில்லை என்று கடந்த வருடம் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.