சென்னை

திமுக அநேகமாக 2 மாநகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.  அதிமுக மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  இதனால் திமுக பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களைக் கைப்பற்றி உள்ளது.  தற்போதைய நிலையில் அதிமுக மற்ற கட்சிகளின் ஆதரவு இருந்தால் இரு நகராட்சிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது.

இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியும் ஒன்றாகும்.  இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 24 வார்டு உறுப்பினர்களில் அதிமுக 10, திமுக 7, பாஜக 3, காங்கிரஸ் 2, சுயேச்சை 2 என வெற்றி பெற்றுள்ளனர்.   இங்கு அதிமுகவின் முந்தைய கூட்டணிக் கட்சியான பாஜகவின் ஆதரவைப் பெற்று நகராட்சி தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுக முயன்று வருகிறது.

அடுத்ததாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அதிமுக 10 வார்டுகள், காங்கிரஸ் 6 வார்டுகள், திமுக 5 வார்டுகள், அமமுக 4 வார்டுகள், சுயேச்சை 1 வார்டு என வெற்றி பெற்றுள்ளனர்.  இங்கு மமுக உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று நகராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்ற அதிமுக முயற்சி செய்கிறது.