தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்ட ஆவடியில் திமுக அமோக வெற்றி

Must read

சென்னை

ற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்ட ஆவடியில் திமுக 35 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

தற்போது நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில் சென்னை புறநகரில் உள்ள ஆவடியும் ஒன்றாகும்.  ஆவடியில் 48 வார்டுகள் உள்ளன.   இங்குக் கடந்த 19 ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் திமுக 38 வார்டுகளில் போட்டியிட்டது.  அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதிமுக தலா 3 வார்டுகளில் போட்டி இட்டன.  தவிர விசிக 2 வார்டுகளிலும் சிபிஐ மற்றும் சிபிஎம் தலா 1 வார்டிலும் போட்டியிட்டது.

அதிமுக சார்பில் 46 வார்டுகளிலும் புரட்சி பாரதம் சார்பில் 2 வார்டுகளிலும் வேட்பாளர்கள் களம் இறங்கினர். 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடந்தது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக 35 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.  திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதிமுக தலா 3 வார்டுகளிலும் சிபிஎம் மற்றும் விசிக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

தவிர அதிமுக 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.

More articles

Latest article