உலகின் மிக அழகிய நாடு இந்தியா : ஆடம் கில்கிறிஸ்ட்

டில்லி

ஸ்திரேலியா கிரிக்கட் அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தனது இந்தியப் பயணத்தை வர்ணிக்கையில் உலகின் மிக அழகிய நாடு இந்தியா என தெரிவித்துள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட் டில்லியில் உள்ள கிரோரி மால் கல்லூரியில் ஒரு கூட்டத்தில் தனது இந்தியப் பயண அனுபவத்தை விவரித்துப் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்தது :

நான் எனது நாட்டுக்கு சென்றதும், என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்தியா எப்படி இருந்தது என விவரிக்கவே இயலாது.  அதுதான் இந்தியா.  இந்தியாவின் அழகையும் வாழ்வியலையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.  இதை நேரில் கண்டால் மட்டுமே புரியும்.” எனக் கூறினார்.

மேலும் பேசுகையில் “என்னுடைய சொந்த நாட்டிலேயே பலருக்கு நான் யார் என அடையாளம் தெரியாது.   ஆனால் வெளிநாட்டினரான என்னை கிரிக்கெட் மூலமாக பலரும் என்னை அடையாளம் கண்டுக் கொண்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது.  என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும், ஆட்டோகிராஃப் வாங்கவும் பலரும் ஆசைப்பட்டனர்.   இடையில் ஒரு நாள் நான் பெல்ஜியம் செல்ல நேர்ந்தது,  அங்கும் என் நாட்டைப் போல என்னை யாருக்கும் தெரியவில்லை.  அது மட்டுமின்றி, ஒருவர் என்னை நீங்கள் கிளென் மெக்ராத் தானே எனக் கேட்டது, நான் பிரபலமில்லை என்பதை எனக்கு நன்கு உணர்த்தியது,” என கூறினார்.


English Summary
Adam Gilchrist praises no one can describe the beauty of India