விழாவில் மிஷ்கினைக் கட்டிப்பிடித்து அழுத நடிகை பூர்ணா..!

Must read

savarakkaththi-movie-photos-14
தமிழில் பல படங்கள் நடித்த பூர்ணா சில காலமாக நடிக்க வாய்ப்பு இல்லாததால் அவரை திரையில் காண முடியவில்லை ஆனால் மிஷ்கினின் கதை, திரைக்கதை, வசனம், வில்லன், தயாரிப்பு என அனைத்தையும் செய்யும் படம் ‘சவரக்கத்தி’ இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய பூர்ணா அப்போது உணர்ச்சி வசப்பட்டு அழுதார் அந்த விழாவில் அவர் பேசியதாவது :-
தமிழில் பல படங்களில் நடித்தேன். எதுவுமே ஹிட்டாகவில்லை. இனிமேல் சினிமா வேண்டாம், டான்ஸ் டீச்சராகவே என் காலத்தைக் கழித்து விடலாம் என்று திரும்பினேன். அப்போது நான் நடித்த ஒரு தெலுங்கு படம் ஹிட்டானது.
மீண்டும் சினிமாவுக்கு வந்தேன். சில வாய்ப்புகள் வந்தது. மீண்டும் வெற்றிடம் ஏற்பட்டது. டான்ஸ் டீச்சராகி விடலாம் என்று நினைத்தபோது, இதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் சுபத்ரா கேரக்டரில் நடிக்க பலர் தயங்கியதால், எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. தயங்கிய அந்த நடிகைகளுக்கு நன்றி. இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு என் அம்மா அழுதார். நானும் அழுதேன். நான் என்ன நினைத்து சினிமாவுக்கு வந்தேனோ, அது இப்போது நடந்திருக்கிறது. என்னையும் நடிகையாக மதித்து வாய்ப்பு கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை என்று பேசிய பூர்ணா, அருகில் நின்ற மிஷ்கினைக் கட்டிப்பிடித்து அழுதார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article