கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் காதல் இல்லை!: ஸ்ரேயா ஸ்டேட்மெண்ட்!

Must read

னக்கு 20 உனக்கு 18 படம் மூலம்  இங்கே அறிமுகமாகி தமிழ இளைஞர்களுக்கும் கனவுக்கன்னியாக விளங்கியவர் ஸ்ரேயா.   தொடர்ந்து ஜெயம் ரவியுடன் மழை, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியுடன் சிவாஜி என்று அவரது கிராஃப் மேலே மேலே ஏறியது.
தற்போது சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார்.  இதில் சிம்புவுக்கு அவர் லிப் டூ லிப் கொடுக்கும் காட்சி ரசிகர்களை சூடேற்றியிருக்கிறது.
0
இந்த நிலையில் ஸ்ரேயாவுக்குவும்  மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோவும்  இடையே காதல் என்று ஒரு செய்தி றெக்கை கட்டி பறந்தது.  மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு  இருவரும் ஜோடியாக சென்று சாப்பிட்டனர்,  இருவரும் ஒரே மாதிரி கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஸ்ரேயா பிராவோவுடன் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால் பிரோவா புகைப்படத்திற்கு  போஸ் கொடுத்தார்.
 
இதனால் ஸ்ரேயா பிராவோவை காதலிப்பதாக உலவிய செய்தியை பலரும் நமப் ஆரம்பித்தனர்.
“ஸ்ரேயாவுக்கு வயது 35. இன்னமும் திருமணமாகவில்லை. பிராவோவுக்கு வயது 33. அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த காதல் ஒர்க் அவுட் ஆகுமா” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் இனஅறு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயா, “பிராவோ என் பெஸ்ட் ப்ரண்ட். ஆனால் இருவருக்குமிடையே காதல் ஏதும் இல்லை” என்று சொல்லிவிட்டார்.
ஸ்ரேயா ரசிகர்களுக்கு இப்ப திருப்திதானே!

More articles

Latest article