“புரடியூசருக்கு ஒரு கார் கூட இல்லீங்…” என்று கண்ணை கசக்கி, பார் முழுதும் புகழ் பெற்றுவிட்டார் சிவகார்த்திகேயன். (ச்சே.. என்வொரு ரைமிங்கான ரைட்டிங்!)
பட்.. “சிவகார்த்தியனால் மூன்று விநியோகஸ்தர்கள் கண்கலங்கி நிற்கிறார்கள்” என்கின்றன கோடம்பாக்கம் குருவிகள்.
download
கால்ஷீட் தருவதாகச் சொல்லி, ஞானவேல்ராஜா, ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன் மற்றும் ‘வேந்தர் மூவிஸ்’ மதன் ஆகியோரிடம் “லம்ப்”ஆக அட்வான்ஸ் வாங்கிவிட்டு தேதி தராமல் இழுத்தடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
“இந்த பணத்தைக் கொண்டு, “24 ஏ.எம்.” நிறுவனத்தின் பெயரில் சொந்தப்படம் எடுத்து துட்டு பார்த்துவிடுகிறார் சிவகார்த்திகேயன்” என்ற புலம்பல் சத்தம் கோலிவுட்டையும் தாண்டி கேட்கிறது.
பணம் கொடுத்தவர்களின் தரப்பில் சிவகார்த்திகேயனை நெருக்கியிருக்கிறார்கள்.  அவரோ,
ஞானவேல்ராஜா நிறுவனத்துக்கு படம் பண்ணுவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு, முன்பணம் வாங்கியது உண்மை என்றும்  மற்ற இருவரிடமும் எந்தவித டீலும் கிடையாது என்றும் சொல்லிவிட்டாராம்.
இது தொடர்பாக  விசாரிக்க, தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரையும் தயாரிப்பாளர் சங்கம்  பேச்சுவார்த்தைக்கு அழைக்க  நோட்டீஸ் விட்டிருக்கிறதாம்.
தற்போது சிவகார்த்திகேயன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர் வந்த பிறகு பஞ்சாயத்து கூடுமாம்!
“மேடையில அழுதவுடனே அச்சச்சோ பாவம்னு நினைச்சோம்.. ஆனா இவருல்ல மத்தவங்களை அழ வச்சிருக்காரு” என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன!