இன்னைக்கு ஜாதி படங்கள் தான் ஓடுது – இயக்குநர் ராம்

Must read

director-ram-compares-uttama-villain-with-birdman-696x465di
பா.ரஞ்சித் தயாரித்த டாக்டர் ஷூ மேக்கர், பிவேர் ஆப் கேஸ்ட் என்ற ஆவண படங்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராம் ஜாதியை பற்றி பேசி சர்ச்சையை உருவாக்கியுள்ளார், அவர் பேசியதாவது :-
இன்றைய காலகட்டத்தில் எம்மாதிரயான படங்கள் பி மற்றும் சி சென்டர்களில் தரலோக்கல் ஹிட் ஆகிறது என்பதும் , அவை எந்த ஜாதியை சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் என்றும் நமக்கு தெரியும். என்றார் இயக்குநர் ராம். தமிழில் இதை போன்ற ஆவண படங்கள் வருவது மிகவும் அரிதான ஒன்றாகும். இதில் டாக்டர் ஷூ மேக்கர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த ஷூ மேக்கர் ஆவண படத்தை நான் உலக தரத்தில் உருவாகி உள்ள மிக சிறந்த ஆவண படங்களில் ஒன்று என்று கூறுவேன். இதை போன்ற கருத்துள்ள குறும்படங்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் எடுப்பது மிகவும் கடினம் , ஆனால் ஆவண படம் என்று வரும் போது அதில் நாம் இதை போன்ற புரட்சிகரமான கருத்துகளை பேசலாம். இந்தியாவின் முக்கியமான ஆவண பட இயக்குநர்களுக்கு சவாலாக இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஜெய் குமார் , அதை எப்போதும் தன்னுடைய திரைப்படங்களின் மூலம் புரட்சி செய்து வரும் இயக்குநர் பா.ராஞ்சித் தயாரித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article