மும்பை

சி ஏ ஏ வுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சி.ஏ.ஏ.) நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. ஆயினும் அந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

நேற்று இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இச்சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது.

இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.  மத்திய அரசால் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்பட்டதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சி.ஏ.ஏ. குறித்துக் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒன்றை  பதிவிட்டு   “கருத்துச் சொல்வதற்கு முன்பு சி.ஏ.ஏ. பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.