சென்னை

நடிகை காயத்ரி ரகுராம் திருப்பதி கோவிலில் முடிக் காணிக்கை அளித்துள்ளார்.

மறைந்த பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராமும் ஒரு நடன இயக்குநர் ஆவார்.  இவர் பாஜகவில் தலைமைப் பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலக்கப்பட்டுள்ளார்.   தற்போது இவர் எந்தக் கட்சியிலும் இணையாமல் உள்ளார்.

காயத்ரி ரகுராம் ‘சார்லி சாப்ளின்’, ‘பரசுராம்’, ‘விசில்’, ‘விகடன்’, ‘அருவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தை இயக்கி நடித்தார்.

நடிகை காயத்ரி ரகுராம் குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று அங்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளார். அவர் டிவிட்டரில் தனது முடி இல்லாத தலையுடன், மயிலிறகு ஏந்தியுள்ள  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் இது குறித்து,

‘இது 10 ஆண்டுக் கால வேண்டுதல். என் வேண்டுதலை திருப்பதி ஏழுமலையான் நிறைவேற்றி தந்துள்ளார். அதற்காக என் முடியை காணிக்கை செலுத்தி விட்டேன். வேண்டுதலை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. தரிசனமும் நல்லபடியாக நடந்தது”

என்றார்.

அந்த வேண்டுதல் என்னவென்று கேட்டபோது, ‘சொந்த காரணங்களுக்கான வேண்டுதல். கொஞ்சம் பர்ஷனல்’ என்று பதிலளித்தார்.

[youtube-feed feed=1]