சென்னை

மிழக அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற, தாமாக முன்வந்து விசாரிக்கிறது. அதாவது அமைச்சர் பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை / விசாரித்து வருகிறார். அவர் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்,

“அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன். வழக்கு தொடர்பாகச் செப்டம்பர் 7-ம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பொன்முடி பதில் அளிக்க வேண்டும்.”

என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.