இந்தி பட வாய்ப்பு கிடைத்தால் டி ஷர்ட்டை கழற்றிவிடுவார்கள்.. காமெடி நடிகை செய்யும் காமெடி

Must read

கோலிவுட்டில் எல்லோ ருக்கும் இந்திக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண் டிருக்கின்றனர்.

சமீபத்தில் வெற்றிமாறன் டெல்லி விமான நிலையத் தில் இந்தி தெரியாது என்பதால் அவமானப்படுத் தப்பட்டதாக தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத் தியது.
இதையடுத்து யுவன் சங்கர் ராஜா, சாந்தனு போன்ற வர்கள் இந்திக்கு எதிராக டி ஷர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி தெரி யாது போடா என்ற டிஷர்ட் ட்ரெண்டிங் ஆனது.
திரையுலகினரின் இந்த இந்தி எதிர்ப்புக்கு திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட வர்கள் ஆதரவு தெரிவித் திருந்தனர்
காமெடி நடிகை ஆரத்தி இந்தி பட வாய்ப்பு கிடைத்தால் டி ஷர்ட்டை கழற்றி விடுவார்கள் என்று கூறியிருக்கிறார். அவர் எழுதி இருப்பதாவது:
நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்…
ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும் பிறந்திருக்கு.. அதனால பழிப்பது தவறு, விரும்பி னால் படிப்போம்… இந்தி பட வாய்ப்பு வந்தால் டி ஷர்டை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article