நடிகர் விஜய்-யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்குகிறார்.

ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்கிறது லைகா தாயாரிப்பு நிறுவனம்.

தந்தையைப் போல் நடிகராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த தகவலை லைகா நிறுவனம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

லைகா நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க இருக்கும் படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் படத்தின் பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.