முதல்வர் எடப்பாடியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! பரபரப்பு…

Must read

சென்னை:  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அவர்களது சந்திப்பு மாஸ்டம் படம் திரையிடலைப் பற்றியதா அல்லது தமிழக அரசியல் களத்தை பற்றியதா என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. தணிக்கைப் பணிகள் முடிந்ததால், பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அதன்படி, ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.  அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போதைய நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,  திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்களில் கூட்டம் இல்லை. இதனால்,  திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வரின் இல்லத்தில்  இன்று காலை விஜய் மற்றும் படக்குழுவினர் முதல்வரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் திரையுலகினர் வேண்டுகோள் வைத்தால் 100% இருக்கைக்கு அனுமதி கொடுக்கப்படும்  என தெரிவித்திருந்த நிலையில், மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், 100 சதவிகி இருக்கை அனுமதி கோரி நடிகர் விஜய் முதல்வரை சந்தித்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்குப் பரிசீலித்து முடிவு செய்வதாக மிழக முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

அதிமுக அரசை கடுமையாக சாடி நடிகர் விஜய் தனது திரைப்படங்களில் பஞ்ச் டயாலாக் பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திடீரென படம் வெளியீடு சம்பந்தமாக அவர் முதல்வரை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் எடப்பாடி சந்திப்பு தமிழக திரையுலகிலும், அரசியல் களத்தில் பரபரப்பை உருவாகி உள்ளது.

More articles

Latest article